வியாழேந்திரனின் சாதனையை முறியடித்தார் யாழ் எம்.பி இளங்குமரன்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தண்ணீர் குழாய்க்கு நாடா வெட்டி திறப்புவிழா செய்தமை கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
கடந்த 2021, ல் பொதுசன முன்னணி கட்சியின் மட்டக்களப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த சதாசிவம் வியாழேந்திரன் கிணறு ஒன்றை கட்டி அதற்கு நாடாவெட்டி திறந்துவைத்து உலகசாதனை படைத்தார்.
தண்ணீர் குழாய் திறப்புவிழா
அந்த சாதனையை 2025,ல் யாழ்மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் முறியடித்துள்ளார்.
உலகிலேயே முதல் முறையாக தண்ணீர் குழாய்க்கு நாடா வெட்டி திறப்புவிழா செய்து வியாழேந்திரனின் கிணறு திறப்பு விழா சாதனையை இளங்குமரன் முறியடித்துள்ளார்.
திறப்பு விழாவுக்கும், ஆரம்பிக்கும் விழாவுக்கும் (நிகழ்வு) உள்ள வேறுபாடுகள் அறியாமையே இதற்கான காரணம் என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.