மக்கள் வாழும் பகுதிக்குள் முதலை நடமாட்டம்
அம்பலாங்கொடை, மாதம்பை ஆற்றில் அண்மைய நாட்களாக முதலை நடமாட்டம் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
அம் முதலை தற்போது அம்பலாங்கொடை உரவத்த கங்காராம விகாரைக்கு பின்னால் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 அடி நீளம் கொண்ட இந்த முதலையை உரிய அதிகாரிகள் மக்கள் வாழும் பகுதிக்கு வராதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் வனவிலங்கு திணைக்களத்துக்கு தெரியப்படுத்திய போதும் இதுவரை அவர்களிடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலையின் நடமாட்டம் காரணமாக ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் அச்சமடைந்துள்ளதுடன் மீன்பிடி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கிராம மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.