நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடியல்லாதொட்ட வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், அதற்கு எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கடுமையான மதுபோதை
விபத்தில் பலத்த காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளும், பின்னால் பயணித்த ஒருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மோட்டார் சைக்கிளின் சாரதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் உடாராவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் கோணகங்கார பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, எதிர்த்திசையில் வந்து மோதிய மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி விபத்து ஏற்படும் போது கடுமையான மதுபோதையில் இருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.