பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்: கடற்படை வீரருக்கு நேர்ந்த கதி
மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய கடற்படை வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவம் இன்று (21) காலை தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மதுமோதையில் கடற்படை வீரர் ஒருவர் மோட்டார் சைக்கிளை செலுத்திய நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்து தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் மாகொல கடற்படை முகாமில் கடமையாற்றும் 36 வயதுடைய கொட்டபொல, கெடபருவகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்திய பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மதுபோதையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.