பாதசாரி கடவையில் மாணவியை மோதிய மோட்டார் சைக்கிள்
பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில், ஒன்பது வயது மாணவி ஒருவர் படுகாயமடைந்து டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து, நேற்று (20) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன்-குடாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை பாதிரியார் ஒருவர் ஓட்டிச் சென்றதாகவும், விபத்தில் பாதிரியார் காயமடைந்து டிக்கோயா-கிளங்கன் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான விசாரணையில், பாதிரியார் தனது மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் கவனக்குறைவாக ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக ஹட்டன் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.