எரிபொருளை தொடர்ந்து தற்போது திடீரென பற்றி எறிந்த மோட்டார் சைக்கிள்
புத்தளம் தில்லையாடி பகுதியில் நேற்றிரவு நின்றுக் கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் வெளியான தகவலானது,
தில்லையடி பகுதியில் உள்ள ஹோட்டலில் உணவு எடுத்து செல்வதற்காக ஒருவர் மொட்டையர் வாகனத்தை நிறுத்தியுள்ளார் அவரது வாகனமே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட பணியாளர்களும், ஹோட்டலுக்கு வருகை தந்தவர்களும் கூட்டாக இணைந்து சில நிமிடங்களில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனால், குறித்த மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்துள்ளது. எனினும், உயிர்ச் சேதங்கள் எதுவுமில்லை என கூறப்படுகிறது.
நாட்டில் கடந்த சில நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் திடீரென பற்றி பல அசம்பாவிதங்கள் நடந்த நிலையில் தற்போது மோட்டார் வாகனமும் தீப்பற்றி எறிவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.