மட்டக்களப்பில் குழந்தையுடன் சென்ற தாய் மாயம்; தேடிய உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மட்டக்களப்பு படுவான்காரைபெருநிலம் கொத்தியபுலையை சேர்ந்த இளம் தாய் ஒருவர் 2 வயது குழந்தையுடன் நேற்று (19)மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சுகவீனத்தால் மருந்து எடுக்க சென்றவர் வீடு திருப்பவில்லை என கூறப்படுகின்றது.
அதன் பின்னர் இன்று (20 ) காலையில் அந்த 2 வயது குழந்தை வயல் வரம்பு அருகில் அழுதுகொண்டு இருந்த நிலையில் வழியால் சென்றவர்களல் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பழைய கிணற்றில் அழுகிய நிலையில் மனித உடலங்கள்
இந்த நிலையில் தாயார் தாந்தாமலை நெல்லிக்காடு வயல் வெளியில் உள்ள கிணற்றில் இருந்து குற்றுயிராய் மீட்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அதோடு தாயின் தாலிக்கொடி களவாளப்பட்டுள்ளது. அதேவேளை இளம் தாய் மீட்கப்பட்ட பழைய கிணற்றில் அழுகிய நிலையில் இன்னும் சில மனித உடலங்கள் உள்ளதாக அந்த தாய் கூறியதாகவும் அறியமுடிகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.