இரு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கி உயிர் மாய்ப்பு; தமிழர் பிரதேசத்தில் துயரம்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04 பகுதியில் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் வேலுப்பிள்ளை பிரவாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பதில் நீதிவான் ஏ.எம். நசீலின் உத்தரவின் பேரில், திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.