விபரீத முடிவால் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தாயார்
29 வயது இளம் தாய் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
காரைதீவு 09 ஆம் பிரிவில் கண்ணகி கிராமத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு பிள்ளைகளின் தாயான இவர் கணவனுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து தூக்கிட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள், அயலவர்கள் இரவு 8 மணியளவில் அவரை மீட்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை நீதிவானின் அறிவுறுத்தலுக்கு அமைய சாய்ந்தமருது பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹீர் மறுநாள் மரண விசாரணை மேற்கொண்டார்.
காரைதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் சகிதம் இவர் சம்பவ வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். கமலரூபிணியின் தாயார், அயல் வீட்டுக்காரர் ஆகியோரின் வாக்குமூலங்களை பதிவு செய்தார்.
இவருடைய அறிவுறுத்தலுக்கு அமைய சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள், உடல் கூற்று பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் பிரகாரம் தூக்கில் தொங்கியதால் கழுத்து இறுகி ஏற்பட்ட மரணம் என்று மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.