இலங்கையில் தாய் ஒருவரின் மோசமான செயல்... பரிதாபமாக உயிரிழந்த ஆண் குழந்தை!
அனுராதபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் 10 மாதம் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று நீரில் அமிழ்த்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனகம, பளுகஸ்வெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 10 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்றே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.
இச் சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக ஹபரணை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹபரணை பகுதியில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக 17 ஆம் திகதி ஹபரணை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
உயிரிழந்த குழந்தை தனது தாய், தந்தை மற்றும் சகோதரன், சகோதரியுடன் வசித்து வந்ததுள்ளது.
தந்தை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், தாய் வீட்டுக்கு பின்னாலுள்ள நீர் நிரம்பிய குழியில் பிள்ளையை நீரில் அமிழ்த்தி கொலை செய்ததாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து 34 வயதுடைய பளுகஸ்வெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட குழந்தையின் தாயை ஹபரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குழந்தையின் சடலம், நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.