வெளிநாட்டிலுள்ள தங்கை பணம் அனுப்பவில்லை; தாயை வயோதிபர் இல்லத்தில் சேர்க்க முனைந்த யாழ் அரச அதிகாரி!
தாயின் பராமரிப்பு செலவுக்கு கனடாவில் உள்ள தங்கை காசு அனுப்ப பிந்தியதால் பெற்ற தாயை வயோதிபர் இல்லத்தில் யாழ் அரச உத்தியோகஸ்தர் ஒருவர் சேர்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளது .
யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் நிர்வாக தரத்தில் இருக்கும் அதிகாரியின் தாய் பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டவராவார். அரச உத்தியோகஸ்தரின் மனைவியும் ஆசிரியை என்பதனால் தாயைப் பராமரிப்பதற்காக பெண் ஒருவரும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தாயின் பராமரிப்பு செலவு
தாயின் பராமரிப்பு செலவுக்கு என கனடாவில் உள்ள அதிகாரியின் சகோதரி மாதாமாதம் பணம் அனுப்பி வரும் நிலையில் கடந்த மாதம் சகோதரி அனுப்பவில்லை என கூறப்படுகின்றது.
இதனையடுத்து அதிகாரி சகோதரியுடன் முரண்பட்ட நிலையில் பணத்தை அடுத்த மாதம் சேர்த்து அனுப்புவதாகத் தங்கை தெரிவித்த போதும் அதிகாரி அதற்கு உடன்படவில்லையாம்.
இந் நிலையில் தங்கை தொலைபேசித் தொடர்பை துண்டித்ததுடன் அண்ணன் பல தடவைகள் தொலைபேசி எடுத்தும் பதிலளிக்கவில்லை என தெரியவருகின்றது.
இதனையடுத்து தனது தாயை வயோதிபர் மடத்தில் சேர்ப்பதற்கு அதிகாரி முயற்சித்துள்ளார். இதனை அறிந்த குறித்த அதிகாரியின் தாயின் சகோதரிகள் அவரை தமது வீட்டுக்கு கூட்டிச் சென்று பராமரித்து வருவதாகவும் இதனால் தாயின் சகோதரிகளும் அதிகாரிக்கும் முரண்பாடு ஏற்பட்டு பொலிஸ் நிலையம்வரை சென்றுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
அதேசமயம் அதிகாரியின் மனைவி பொலிசாருடன் முரண்பட்டு பொலிசாரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
அதோடு அதிகாரி தாயைப் பாராமரித்த பெண்ணின் சம்பளமும் இருமாதங்களாகக் கொடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் அதனை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என பொலிசாரால் அதிகாரிக்கு பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேசமயம் அதிகாரியின் மனைவி பிரபல பாடசாலை ஒன்றில் ஆரிசியையாகக் கடமையாற்றி வருகின்றாராம்.
அதேவேளை பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்னுக்குள் வைத்து காப்பாற்றி வளர்த்து ஆளாக்கிவிட, அவர்களின் முதுமை காலத்தில் பிள்ளைகள் பெற்றோர்களை பாரமாக நினைக்கும் கலாச்சாரம் தற்கால நவீன யுகத்தில் உருவாகியுள்ளது.
தாய் தந்தையின் உதவி அவர்கள் தமது பிள்ளைகளை படிப்பித்து ஆளாக்கும் வரைக்குமே நிலைக்கின்றது. நாளை தமக்கும் அதே முதுமைநிலை வரும் என்பதனை இன்றைய இளையோர்கள் மறந்து விடுவது நம் இனத்தின் சாபக்கேடு.
You My Like This Video