மருமகனால் தாக்கப்பட்டு மாமியார் உயிரிழப்பு!
பொல்பித்திகம அலுத்வேகெதர பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கணவன் மற்றும் மருமகனுக்கு இடையே நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற மோதலை தடுக்கு சென்ற குறித்த பெண் மருமகனால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பெண் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொல்பித்திகம அலுத்வேகெதர பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் கணவரும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன் அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.