இலங்கையில் 7 வயது சிறுவனுக்கு தாய் மற்றும் பாட்டியால் நேர்ந்த கொடுமை!
07 வயது பிள்ளையை கொடூரமாக தாக்கிய தாயும், பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிசார் கைது செய்தனர். சிறுவனின் தாய் மற்றும் பாட்டி ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பொலிசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். நான்கு குழந்தைகளைக் கொண்ட இந்த குடும்பம் கணேகொட பகுதியில் வசிக்கிறார்கள்.
விகாரையில் தங்கியிருந்து படித்த 16, 9, 7 வயது பிள்ளைகள் வீடு திரும்பிய போது, 7 வயது பிள்ளை தனது பாட்டியை வணங்கவில்லையென கூறி தாயாரால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தை 13 வயதான பிள்ளை ஒருவரே பதிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து காயமடைந்த பிள்ளையிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் , தாக்குதலுக்குள்ளான குழந்தை மருத்துவ பரிசோதனைக்கு ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.