மன்னாரில் இளம் தாய் - சேய் உயிரிழப்பு; நேரில் சென்ற .சத்தியலிங்கம் எம்பி!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது உயிரிழந்த இளம் தாய் வனஜா மற்றும் அவரது சிசுவின் மரணம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ப.சத்தியலிங்கம் நேரில் சென்று ஆராய்ந்தார்.
இருவரின் உயிரிழப்பால் துயரத்தில் வாழும் குடும்பத்தினரை நேற்று மன்னாரில் உள்ள அவர்களது இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சம்பவம் தொடர்பில் தமக்கான நீதியைப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ப.சத்தியலிங்கம் , உயிரிழந்த தாயாரின் ஆவணங்களைப் பரிசோதித்து அதன் விபரங்களையும் பெற்றுச் சென்றார்.