தமிழர் பகுதியில் ஈவிரக்கமின்றி 7 வயது மகனை தாக்கிய தாய்; அதிரடி நடவடிக்கை எடுத்த கிராம மக்கள்!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் இளம் தாய் ஒருவர் தனது வீட்டில் தனது 7 அகவை மகனை தாக்கியமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு தாயாரை கைது செய்துள்ளார்கள்.
மகனுக்கு புத்தக பாடங்களை கற்றுக்கொடுக்கும் போது மகனை கொடூரமாக தாக்கிய காணொளி எடுத்த அயலவர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இரண்டாவது திருமணம் செய்த தாய்
25 அகவையுடைய இளம் தாயார் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து 5 மாத கைக்குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் தனது முதல் கணவனுக்கு பிறந்த 7 அகவையுடைய பாடசாலை சிறுவனுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் போது தடியால் தாக்கியுள்ளார்.
குறித்த காணொளி கிராம மக்களால் எடுக்கப்பட்டு வெளியானதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு போலீசாரால் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலீசார், தாயை 22.03.2024 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அதேசமயம் பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்டமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.