யாழ் சிறைச்சாலைக்குள் மகனுக்கு தாய் இரகசியமாக கொண்டுவந்த மர்ம பொருள்! இறுதியில் நடந்தது?
யாழ் சிறைச்சாலையில் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட இரு விளக்கமறியல் கைதிகளும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, 7 மாதங்களாக யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை பார்வையிட வந்த தாயார், இரகசியமாக பீடி வழங்கியுள்ளார்.
பீடியை சிறைச்சாலைக்குள் கடத்தி வந்தபோது, சிறைச்சாலை அதிகாரிகளிடம் சிக்கியதை தொடர்ந்து, இரு கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
பீடி கடத்தியவரும், பீடி கடத்தப்படுவதை தெரிந்திருந்தும் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தகவலளிக்காத மற்றொரு கைதியுமே தாக்கப்பட்டனர்.
நேற்று அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளால் தாம் தாக்கப்பட்டதாக அவர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களை சட்டவைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டது.
கொக்குவில் மேற்கு பகுதியை ஒருவரும், ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த ஒருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்கப்பட்ட கைதிகளின் உறவினர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திலும் முறையிட்டுள்ளனர்.