தமிழர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பெரும் சோகம்
வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா நகர் நோக்கி பயணிப்பதற்காக கண்ணாட்டி பகுதியை சேர்ந்த தாயும் மகளும் பாடசாலைக்கு செல்வதற்கு பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் தாய் மற்றும் மகள் மீது டிப்பர் வாகனமொன்று மோதியுள்ளது.
கொந்தளித்த மக்கள்
இந்நிலையில் 36 வயதுடைய தாய் மற்றும் அவரது 6 வயதுடைய மகள் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதன்போது ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் டிப்பர் சாரதியை கைது செய்திருந்ததுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, விபத்தையடுத்து பொறுமை இழந்த பொதுமக்கள் டிப்பர் வாகனத்தை சராமரியாக தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்பட்டனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.
சம்பவஇடத்திற்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.