உலகின் அதிக செலவு மிக்க நகரங்கள் பட்டியல் வெளியீடு
உலகில் அதிக செலவுமிக்க நகரமாக இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் டெல் அவிவ் நகரமானது முதன் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Economist Intelligence Unit நாடத்திய ஆய்வில் 173 நகரங்களின் விலைவாசிகள் ஒப்பிடப்பட்டன. தற்போது இஸ்ரேலின் நாணயம் வலுவடைந்ததும் மேலும் போக்குவரத்து, மாளிகைப் பொருட்களின் விலை உயர்வும் விலைவாசி ஏற்றத்துக்கான காரணமாக கூறப்படுகிறது.
அதிக செலவுமிக்க முதல் 10 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி,
1.டெல் அவிவ்
2.சிங்கப்பூர்,பாரிஸ்
4.சூரிச்
5.ஹொங்காங்
6.நியூயார்க்
7.ஜெனீவா
8.கோபன்ஹேகன்
9.லொஸ் ஏஞ்சல்ஸ்
10.ஒசாக்கா ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் உலகின் மிகக் குறைந்த செலவு உள்ள நகரமாக சிரியாவின் டமாஸ்கஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது.