காலையில் பழைய சோறு சாப்பிடுவது நல்லதா?
தொழில்நுட்பத்தால் வளர்ச்சி அடையும் இந்த கால கட்டத்தில் எல்லோரும் இன்று ஃபாஸ்ட் ஃபுட்டை நோக்கி நகர்ந்து செல்கின்றனர். இந்த பழைய சாதத்தின் அருமை தெரியும் வாய்ப்பு குறைவாகவே தான் இருக்கும். இப்போது உள்ள குழந்தைகள் யாரும் இதை பெரிதாக விரும்புவதில்லை.
இதனால் சிறு வயதிலேயே அவர்கள் உடல் சமந்தமான பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே அவ்வபோது காலை வேளையில் பழைய சாதம் சாப்பிட்டாலே நமது உடலை ஒரளவுக்கு பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த பழைய சாதம் சாப்பிடுவதால் நம் உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.
பழைய சாதத்தில் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருக்கின்றன.
காலை வேளையில் இதை சாப்பிடுவதால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும். உடல் உஷ்ணத்தை போக்கும். நாள் முழுவதும் நம்மை புத்துணர்சியுடன் தோன்ற வைக்கும்.
ஒவ்வாமை மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பழைய சாதம் தீர்வு தரும். இளமை தோற்றத்தை தக்க வைக்க உதவும்.