ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் கைது
நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் நேற்று (24) 30,236 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றங்களுடன் நேரடி தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பகிரங்க பிடியாணை உத்தரவு
மேலும் இந்த நடவடிக்கைகளின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 256 பேரும், பகிரங்க பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்த 200 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 429 சாரதிகளையும் பொலிஸார் இதன்போது கைது செய்துள்ளனர்.
முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் நேற்றைய தினம் கவனயீனமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 53 பேர் கைது செய்யப்பட்டது.
அத்துடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,706 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.