இனி இலங்கை மீது பறப்பதற்கு அதிக கட்டணம்!
இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை வான் பரப்பை பயன்படுத்தும் வெளிநாட்டு விமானங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது.
இலங்கையின் வான் பரப்பை பயன்படுத்தும் வெளிநாட்டு விமானங்கள் மூலம் வருடாந்த வருமானத்தை ஒரு கோடியே இருபது இலட்சம் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
அதன்படி விமானப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்க துறைமுகங்கள், கடற்படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த புதிய கட்டணங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் நிலையில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விமானக் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
மேலும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.