பூமியை விட நிலவின் நேரத்தில் ஏற்ப்பட்டுவுள்ள மாற்றம் ; நாசா வெளியிட்ட புதிய தகவல்
நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் காலடி வைத்தனர். அன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் சந்திரனின் நேரம் சுமார் 1.1 வினாடிகள் நீண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்திரனின் தென் துருவமானது சூரியனிலிருந்து விலகி நிரந்தரமாக நிழலாக இருக்கும் பகுதி. இங்கு மனிதர்கள் கால் பதிக்கக்கூடிய இடங்கள் உள்ளன. 1969 ஆம் ஆண்டு நாசா தனது அப்பல்லோ திட்டத்தின் மூலம் முதன்முறையாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்தது.
அதன்பிறகு தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. திட்டத்திற்கு ஆர்ட்டெமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி நாசா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், பூமியை விட சந்திரனின் நேரம் வேகமாக ஓட ஆரம்பித்துள்ளது.
சந்திர நேரம் ஒரு நாளைக்கு 57 மைக்ரோ விநாடிகள் வேகமாக இயங்கத் தொடங்கியுள்ளது. ஆர்ட்டெமிஸ் பயணத்திற்கு முன் சந்திரனின் நேரத்தை துல்லியமாக கணிக்க நாசா முடிவு செய்தது.
விண்வெளி வீரர்கள் கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் காலடி வைத்தனர். அன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் சந்திரனின் நேரம் சுமார் 1.1 வினாடிகள் நீண்டுள்ளது.
பொதுவாக, இது ஒரு பெரிய விஷயமல்ல. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள நேரம் சரியாக இருக்கும் போதுதான் நேவிகேஷன் சிஸ்டம் போன்ற செயற்கைக்கோள்கள் துல்லியமாக செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.