ரோபோக்களின் அதிவேக வளர்ச்சி ;2036 இற்குள் உலகில் பணத்தின் தேவை குறையும்; எலோன் மஸ்க் கணிப்பு
2036-ஆம் ஆண்டுக்குள் உலகில் பணத்தின் தேவை பெருமளவில் குறைந்துவிடும் என உலக பெரும் பண்க்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித வடிவ ரோபோக்களின் அதிவேக வளர்ச்சி, மனிதர்களைக் காட்டிலும் அதிக அளவில் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்யும் திறனை உருவாக்கும் என அவர் கூறியுள்ளார்.

மனித வடிவ ரோபோக்களின் அதிவேக வளர்ச்சி
இதன் காரணமாக, உலகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகக்கூடும் என்றும், அதன் விளைவாக பணத்தின் அவசியமும் அதன் பொருளாதார முக்கியத்துவமும் படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் எலோன் மஸ்க் கணித்துள்ளார்.
எனினும், இது தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்ட அவரது எதிர்காலக் கணிப்பாகும்.
அதேசமயம் 2036-ஆம் ஆண்டுக்குள் பணத்தின் தேவை முற்றிலும் இல்லாமல் போகும் என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ பொருளாதார மதிப்பீடோ அல்லது உலகளாவிய ஒருமித்த கருத்தோ இதுவரை வெளியாகவில்லை.