மட்டக்களப்பில் சிக்கிய பாரிய பண மோசடி செய்த போலி முகவர்!
மட்டக்களப்பு - அமிர்தகழி பிரதேசத்தைச் சேர்ந்த பண மோசடி செய்த போலி முகவர் நேற்று (13.08.2023) கொழும்பு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதாக ஒருவரிடம் 4 லட்சத்து 50,000 ரூபா வீதம் 22 பேரிடம் சுமார் ஒரு கோடி ரூபா பணமோசடி செய்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இம்முறையில் ஏமாற்றப்பட்ட இருவர் கொழும்பு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த போலி முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் மேற்கொண்டதனைத் தொடர்ந்து குறித்த நபர் தலா 4 லட்சம் ரூபா வீதம் 22 பேரிடம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட போலி முகவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என தகவலறியப்பட்டுள்ளது.