சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டவிருக்கும் மோடி
சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு நாளை திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவிருக்கின்றார் சம்பூரில் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 603 ஏக்கர் நிலபரப்பில் இது நிறுவப்பட இருக்கின்றது
ஆரம்பத்தில் சம்பூர் அனல் மின் நிலைய திட்டம் என அறிவிக்கப்பட்டிருந்த இவ் திட்டம் மக்கள் எதிர்ப்பையடுத்து இது சூரிய மின் உற்பத்தி திட்டமாக மாற்றப்பட்டிருந்தது அதன் பிரகாரம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
அதாவது முதல் கட்டத்தில் 50 மெகாவோட் சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் 70 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் என இரண்டு கட்டங்களாக செயற்படுத்த இருக்கின்றார்கள்
உண்மையில் அபிவிருத்தி மற்றும் முதலீடு தொடர்பிலான செயற்திட்டங்களை அரசியலை முன்னிறுத்தி எதிர்க்க வேண்டியதில்லை ஆனால் அபிவிருத்தி என்கின்ற பேரில் வேறு தரப்பின் நலன்களை மையப்படுத்தியதாக இருக்கும் போது பேச வேண்டி இருக்கின்றது சம்பூரில் சூரிய மின் உற்பத்தி திட்டங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தில் 308 ஏக்கர் மிகவும் வளமான விவசாய நிலமாகும்.
அதே போல விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுத்தப்படுகின்ற 5 நீர் நிலைகள் இங்கு இருக்கின்றது. அதே போல கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் அங்கிருக்கின்றன
இவ்வாறு வளமான வயல், குளங்கள் , பசுமையான காடு என பரந்த நிலத்தில் ஒரு பகுதியை மின் உற்பத்தி திட்டம் என்கின்ற பெயரில் இந்தியாவிற்கு தாரை வார்கின்றார்கள்
அந்த பகுதியில் தான் மின் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டுமென்றால் பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமற்ற குளங்கள் அற்ற பெருங்காடுகளற்ற விலங்குகளின் வாழ்வை அச்சுறுத்தாத சூரியொளி அதிகம் கிடைக்கக்கூடிய ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைப் பெற்றிருக்க முடியும்.
அதே போல சம்பூருக்கு மேலதிகமாக இலங்கை பூராகவும் தரிசு நிலங்கள் பரந்து விரிந்து இருக்கின்றன ஆனால் அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு வாழ்வாதாரத்திற்கு உதவும், அதிகாரமற்ற மக்களின் உறுதிக் காணிகளில் இந்த நிலையத்தை அமைக்க துணை போய் வன்முறையில் ஈடுபடுகின்றார்கள்
இந்த நிலத்தில் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஜேவிபி ஆளும் கட்சியாக இதற்கு துணை போகின்றது என்பது தான் அதியுச்ச துன்பமான நிகழ்வாகும் குறிப்பாக மக்களின் ஜீவனோபாயத்திற்குப் பாதகம் விளைவிக்கும் எத் திட்டங்களையும் நாம் அனுமதிக்கப் போவதில்லை என பேசிய ஜேவிபியின் பிரதி அமைச்சர் திரு அருண் ஹேமச்சந்திரா தற்போது அமைதியாக இருக்கின்றார்
சம்பூர் மக்களின் காணிகள் அவர்களிடம் சேர்க்கப்படும் வரையில், போராடுவோம் என மனித உரிமைகள் ஆணைக்குழு முதல் நீதிமன்றங்கள் வரை சென்ற திரு அருண் ஹேமச்சந்திரா தற்போது அதிகாரத்திலிருந்தும் வேடிக்கை பார்க்கின்றார்
சூரிய உற்பத்தி திட்டத்தை நடை முறைப்படுத்தினால் வருடந்தோறும் பெரும்போகத்தில் மட்டும் 112,000 புசல் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் என சொல்லுகின்றார்கள் ஆனால் அதிகாரமற்ற மக்கள் என்ன செய்ய முடியும் ? யாரிடம் முறையிட முடியும் ?
அந்த மக்களோடு இருந்து அவர்களுக்காக பேசிய ஜேவிபி யே தடம்மாறி அவர்களை கைவிட்ட பின்னர் என்ன செய்ய முடியும் ? 2005 ஆம் ஆண்டு விபு கட்டுப்பாட்டின் கீழ் சம்பூர் இருந்த நேரமே இந்தியா இலங்கையிடம் அங்கு அனல் மின் நிலையமொன்றை அமைக்க கோரிக்கை வைத்திருந்தது
நுரைச்சோலை மின் உற்பத்தி சீனாவிற்கு வழங்கப்பட்ட நிலையில் திருகோணமலை துறைமுகத்திற்கு நெருக்கமான சம்பூரில் தனக்கு மின் உற்பத்தி நிலையம் வேண்டும் என இந்திய நிர்பந்திக்கின்றது திருகோணமலை எண்ணெய் குதங்கள், திருகோணமலை துறைமுகம் என தொடங்கி யாழ்ப்பாண தீவுகள் வரை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றது
இதற்காக ஜேவிபி யை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றார்கள் செப்டம்பர் 12, 1989 அன்று மருந்துக் கூட்டுத்தாபனத்தின் (SPC) தலைவராகப் பணியாற்றிய Dr. Gladys Jayawardene அவர்களை இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய எடுத்த தீர்மானித்தமைக்காக ஜேவிபி கொலை செய்தது இவ்வாறு இந்திய எதிர்ப்பை மையப்படுத்தி இந்திய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய அதே ஜேவிபி இன்று ஆளும் கட்சியாக இந்தியாவிற்கு துணை போகின்றது அண்மைய காலத்தில் இலங்கை பொருத்தமற்ற வேறு தரப்புகளின் விருப்பங்களை மையப்படுத்திய அபிவிருத்தி முயற்சிகளால் தான் Debt Trap யில் சிக்கி கொண்டது இந்த தடவை மக்களை அகதிகளாக்கி அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து விட்டு முதலீட்டு திட்டங்களை கட்டியெழுப்ப முடியாது என்பதை தெரிந்து கொள்ளும்