ஒரே ஒரு விஜயம்; இலங்கையை வளைத்து கைக்குள் போட்ட மோடி; சினத்தில் சீனா!
இலங்கை மற்றும் இந்தியா இடையே பல பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு புலனாய்வுத் தகவல் வழங்குவது , திருகோணமலையில் சக்த்திவாய்ந்த ராடர் ஒன்றை நிறுவுவது.
15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள்
இலங்கை கடல் படைக்கு பயிற்ச்சி, மற்றும் விமானப் படைகளுக்கான பயிற்ச்சி மற்றும் விமானங்களை வழங்குவது என்று , 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியா மற்றும் இலங்கை இடையில் கைச்சத்திடப்பட்டுள்ளது.
இதனூடாக ஒட்டு மொத்தத்தில் மோடி இலங்கையை வளைத்து கைக்குள் போட்டுள்ளார் .
சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைப்பதற்கான முழு நடவடிக்கையில் இறங்கிய மோடிக்கு இது பெரும் வெற்றி அளித்துள்ளதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையை ஆதிக்கம் செலுத்துவதில் இந்தியா , சீனா இடையில் எப்பொழுதும் போட்டித்தன்மை நிலவி வரும் நிலையில், மோடியின் இலங்கைக்கான விஜயமும், பல ஒப்பந்தங்கள் கைச்சாதான விடயமும் சீனாவை அதிருப்திக்குள் தள்ளியுள்ளது என்றே கூறலாம்.