இலங்கை மக்களால் நெகிழ்ச்சியில் மோடி ; தமிழில் வெளியிட்ட பதிவு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (4) இரவு இலங்கை வந்தடைந்தார்.
இந்நிலையில், அவர் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் பெரும் வரவேற்பளித்தனர்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, “ கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை பிரதி பலித்த பொம்மலாட்டதினை இங்கு காண முடிந்தது. நளின் கம்வாரி மற்றும் ஸ்ரீ அநுர பொம்மலாட்ட கழகத்தினருக்கு அவர்களது ஆர்வம் மற்றும் ஆற்றலுக்காக எனது பாராட்டுகள். pic.twitter.com/DLQSexpJM8
— Narendra Modi (@narendramodi) April 4, 2025
அத்துடன் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் பொம்மலாட்டத்தினை பார்வையிட்ட இந்தியப் பிரதமர் மோடி அது குறித்து அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில்,
“ சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை பிரதி பலித்த பொம்மலாட்டதினை இங்கு காண முடிந்தது. நளின் கம்வாரி மற்றும் ஸ்ரீ அநுர பொம்மலாட்ட கழகத்தினருக்கு அவர்களது ஆர்வம் மற்றும் ஆற்றலுக்காக எனது பாராட்டுகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.