நவீனமயமாகும் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் ; ஆரம்பமாகும் பணிகள்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொழும்பு கோட்டை ரயில் நிலைய நவீனமயமாக்கல் பணிகள் நாளை வியாழக்கிழமை (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன
நாளை காலை 09.00 மணிக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இந்த நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

கிளீன் ஸ்ரீ லங்கா
இன்று திறந்து வைக்கப்படவுள்ள நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு இணையாக, ரயில் நிலையத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
'கிளீன் ஸ்ரீ லங்கா' செயலகத்தின் மேற்பார்வையின் கீழ், பயணிகளுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளை உள்ளடக்கியதாக இந்தப் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன.