மோதரவில் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் தொடர்பில் வெளியான தகவல்!
மோதரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (13-02-2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய கார் ஏகல காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனத்தின் சேஸ் மற்றும் எஞ்சின் இலக்கங்கள் கீறப்பட்ட நிலையில், வாகனத்திற்குள் தோட்டா ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது.
நேற்றிரவு மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 51 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் காரில் வந்து உணவகத்தின் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மோதரை பொலிஸாரால் குற்றவாளிகளை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.