சுமந்திரன் மகனின் திருமணத்தில் வெடித்தது சர்ச்சை! பரபரப்புக் குற்றச்சாட்டு

Colombo Jaffna SUMANTHIRAN Wading Thurairatnam
By Independent Writer Dec 31, 2021 12:46 AM GMT
Independent Writer

Independent Writer

Report
143 Shares

திருமண பந்தம் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விவகாரம் என்கின்ற போதிலும், பிரபல்யங்களின் திருமணம் பொதுத் தளத்தின் தவிர்க்கமுடியாத பேசுபொருளாகிவிடுகின்றன.

பிரித்தானிய மகாராணியின் புதல்வரின், பேரனின் திருமணங்கள் பற்றி உலகமே பேசிக்கொண்டது ஒரு உதாரணம்.

த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது மருமகளாக ஒரு சிங்களப் பெண்ணை ஏற்றுக்கொண்டது அவர் தனது மகனின் அன்புக்கு கொடுத்த ஒரு கௌரவமாகவும், தமிழ் சிங்கள நல்லிணக்கத்தின் ஒரு வெளிப்பாடாகவும் சில தரப்புக்களால் பார்க்கப்பட்டுவருகின்ற அதேவேளை, அவரின் அந்தச் செயல் பொதுத்தளத்தில் ஒரு சிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.

குறிப்பாக சுமந்திரனின் நெருங்கிய நன்பரும், முன்நாள் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவரும், இலங்கை ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்நாள் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான இரா.துரைரெத்தினம் அவர்கள் அந்த திருமணம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் தற்பொழுது சமூக ஊடகப்பரப்பின் விவாதப் பொருளாக மாறிவிட்டுள்ளது.

இதுபோன்ற திருமணங்களை இனக் கலப்பின் ஒரு கருவியாக அடையாளப்படுத்தி திரு. துரைரெத்தினம் முகநூல் பதிவிட்டிருந்தார். 

தமிழர்கள் சிங்களவர்களையோ முஸ்லீம்களையோ திருமணம் செய்வது என்ன பிழை. திருமணம் என்பது அவர்களது விருப்பம் சார்ந்தது என வாதிடலாம். எப்போதும் பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்துடன் கலக்கும் போது சிறுபான்மை இனம் காலப்போக்கில் அழிந்து போய்விடும். இது பல நாடுகளில் சமூகங்களில் நடந்திருக்கிறது மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெட்னம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,

மொழிகள் கூட அழிந்திருக்கிறது. உதாரணமாக சுவிட்சர்லாந்தில் நான்கு மொழிகள் பேசும் சமூகம் இருந்தது. இப்போதும் நான்கு மொழிகள் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்கின்றன. ஆனால் ஜேர்மன், பிரென்ஸ், இத்தாலி, றொமானிஸ், மொழிகள் உத்தியோக பூர்வ மொழிகளாக இருக்கின்ற போதிலும் றோமானிஸ் பேச்சுவழக்கில் இப்போது இல்லை.

ஜேர்மன் மொழி பேசுபவர்களாக றோமானிஸ் மொழி பேசுபவர்கள் மாறிவிட்டார்கள். சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்துடன் கலக்கும் போது சிறுபான்மை இனம் அழிந்து போய்விடும். உதாரணமாக தமிழ் மக்களின் தலைவர் என சிலர் கொண்டாடிய விக்னேஸ்வரனின் இரு பிள்ளைகளும் சிங்களவர்களை தான் திருமணம் முடித்தார்கள்.

விக்னேஸ்வரின் பேரப்பிள்ளைகள் தமிழ் தெரியாத சிங்களவர்களாகத்தான் இருக்கிறார்கள். அது போல சுமந்திரனின் மகன் சிங்களத்தியை திருமணம் முடித்ததாக செய்திகள் வந்திருக்கிறது.

அவர்களின் அடுத்த சந்ததி தமிழ் தெரியாத சிங்களவர்களாகத்தான் இருப்பார்கள். இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில் பெரும்பான்மையுடன் சிறுபான்மையாக இருக்கும் சமூகம் கலந்தால் சிறுபான்மை சமூகத்தின் மொழி கலாச்சாரம் அனைத்தும் இழந்து சிங்கள பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்தும்.

தமிழ் இன அழிப்புக்கு துணை போகும் விக்னேஸ்வரன் சுமந்திரன் போன்றவர்கள் எப்படி தமிழ் இனத்தின் தலைவர்களாக இருக்க முடியும்? தமிழ் இன அழிப்பை செய்யும் விக்னேஸ்வரன், சுமந்திரன் வாழ்க என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

சிங்களப் பெண்ணை மருமகளாக்கிக்கொண்ட சுமந்திரன்!

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US