காணாமல் போன 9 வயது சிறுமி...தீவிர தேடுதலில் பொலிஸார்
09 வயதுடைய சிறுமி ஒருவர் காணவில்லை என பொலிஸாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். அத்துலுகம அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் பாத்திமா ஆயிஷா என்ற மாணவியே காணாமல் போயுள்ளார்.
சிறுமி இன்று காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவில் உள்ள கடைக்கு கோழிக்கறி வாங்கச் சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது தாயார் கூறுகிறார். காணாமல் போன பெண் நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
அருகில் இருந்த சிசிரிவி கேமராவில் சிறுமி கடையை விட்டு வெளியே வருவது தெரிந்தது.
அதன்படி பொலிஸார் தற்போது சிறுமியை தேடி வருகின்றனர்.