IMF தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20 திகதி இரவு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பான இறுதிப் பேச்சுவார்த்தைக்காக கூடவுள்ளது.
அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் வலய பிரதானி, இலங்கை தூதுக்குழுவின் பிரதானி, ஆகியோர் இணைந்து அன்றைய தினம், இரவே இது குறித்து ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தவுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.