மூடப்பட்டது எரிசக்தி அமைச்சு; சுய தனிமைப்படுத்தலில் அமைச்சர் கம்மன்பில
எரிசக்தி அமைச்சின் பல ஊழியர்கள் கொவிட் தொற்றுக்குள்ளானதாக உறுதியானதையடுத்து அமைச்சர் உதய கம்மன்பில சுயதனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் வரும் 05ஆம் திகதி ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்காக அவர் ஏற்பாடு செய்த இரவு விருந்து நிகழ்வு 19ஆம் திகதிவரை ஒத்திவைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அவர் , இன்று காலை அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு குறுந்தகவல் ஊடாக தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
கிருமி தொற்று நீக்கம் காரணமாக இன்று முதல் ஓகஸ்ட் 6 வரை அமைச்சு மூடப்படும் எனவும் அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார்.
அத்துடன் அமைச்சின் பல அதிகாரிகள் வைரஸால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் எனக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் சோதனை எதிர்மறையாக இருந்ததை அடுத்து தாம் சுயதனிமைப்படுத்திக்கொண்டதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.