ஆண்டவன் மீது ஆணையிட்டு..விஜய் மீது பிரமாணம் செய்த அமைச்சர்கள்; புன்னகையுடன் பார்த்து ரசித்த முதல்வர்
தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உணர்ச்சி பொங்க முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அமைச்சர்களும் பதவியேற்பு
அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கும் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் முதலில் புஸ்சி ஆனந்த் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பதவியேற்கும் போது த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் புன்னகையுடன் பார்த்து ரசித்தார்.
இதன் போது அமைச்சராக பதவியேற்ற ராஜ்மோகன் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன் என வாக்குறுதி அளிக்கும் போது விஜய்மீது கை காட்டி சத்திய பிரமாணம் செய்த போது தொண்டர்கள் விண் அதிர முழக்கமிட்டமை குறிப்பிடதக்கது.