அமெரிக்காவிற்கு எதிராக அமைச்சர் போர் கொடி
அமெரிக்காவின் நியூ போட்ரஸ் நிறுவனத்துடன் சிறிலங்கா செய்து கொண்ட ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமானது என அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் நேற்று இரவு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த ஒப்பந்தம் இதுவரையில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை மின்சார துறை தொடர்பிலும் குறித்த நிறுவனத்துடன் இன்று மற்றொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இந்த புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிறிலங்கா வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஒப்பந்தம் தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்தாவிட்டால், பாரிய தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.