அமைச்சுப் பதவிகள்: அதிருப்தியடைந்த மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் கிடைக்காததால் அதிருப்தி அடைந்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருக்கின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் தெரியவருவதாவது,
கடந்த வாரம் பசில் ராஜபக்சவின் Basil Rajapaksa உத்தரவுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam கண்டியில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த கூட்டமானது, கண்டி - மஹியாவையில் அமைந்துள்ள லொஹான் ரத்வத்தையின் வீட்டில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பிலிருந்து சாகர காரியவசம், நாமல் ராஜபக்ச மற்றும் ரோஹித அபேகுணவர்த்தன உள்ளிட்டவர்கள் கூட்டத்துக்காக அங்கு சென்றனர்.
ஆனால், கண்டியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டுக் கட்சி எம்.பிக்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. இதனால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது. - என்றுள்ளது.