யால சரணாலயத்தில் பேயாட்டம் ஆடியது அமைச்சரின் மகனா?
யால வனவளத்துக்குள் அத்துமீறி வாகனங்களில் பேயாட்டம் அடியவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவின் புதல்வா் மற்றும் மைத்துனா் மேலும் அவகளது நண்பா்களுடன் புதிய 40 ஜீப் வண்டிகளுடன் யால வனவளத்துக்குள் அத்துமீறிய நடவைக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .
அச்சத்தில் ஓடிய மிருகங்கள்
அங்கு மிருகங்களுக்கும் மற்றும் காட்டுவளங்களையும் அழித்துள்ளதாகவும். அத்துடன் ரோனா் ஆகாய கெமராக்களுடன் படம் பிடித்தாகவும் மிருகமொன்று அவர்கள் ஓடிச் சென்ற வாகனங்களில் மோதுண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு அட்டகாசம் புரிந்தவர்கள் வெள்ளவாய மோட்டா் கம்பனி, நிக்கரவெட்டிய பாா்ம் முட்டை வியாபார நிறுவனங்களினது உரிமையாளா்களின் வாகனங்கள் மற்றும் அவா்களின் புதல்வா்கள் எனவும் அறிய வருகின்றது.
சுற்றாடல் அமைச்சா் சுற்றாடல்த்துறை வனவளப் பணிப்பாளருக்கு இவா்களை உள் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மான் உயிரிழப்பு
அதேவெளை ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்னா் மகிந்த அமரவீர யால வனப் பிரதேசத்திற்குள் உட்செல்லும்போது கூட ஒர் மான் அவரது வாகனத்தில் மோதுண்டு இறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இவா்களது வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் நீதிமன்றத்தில் ஆஜா் செய்து தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமென சூழலியலாளா்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அதேவேளை சம்பவம் தொடர்பில் அங்கு கடமையில் இருந்த 7 ஊழியா்களை மட்டும் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு காரணமானவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.