வைரலாக பரவும் அமைச்சரின் போலிப் புகைப்படம் ; அரசாங்க தரப்பில் வெளியான தகவல்
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி புகைப்படங்கள் மற்றும் செய்திகளை வன்மையாக நிராகரிப்பதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த புகைப்படங்களை வெளியிட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக்குழுக்களின் உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பிறகு இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் ஊடகப் பிரிவு, அனைத்து ஊடக நிறுவனங்களையும் சமூக ஊடக பயனர்களையும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்களில் துல்லியமான தகவல்களை மட்டுமே பரப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.