மருந்து தட்டுபாடு தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஒரு குறிப்பிட்ட வைத்தியசாலையில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்படுமாயின் அது நிதி பற்றாக்குறையால் ஏற்பட்ட தட்டுபாடு அல்ல மாறாக அவற்றை கொள்முதல் செய்வதில் ஏற்பட்டும் செயன்முறை சிக்கல் காரணமாகவே மருந்துகளுக்கும் மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுபாடு ஏற்படுகிறது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பல் அறுவைசிகிச்சை வைத்தியர்களுக்கான வரையறுக்கப்பட்ட வழிமுறைபயிற்சிக்காக சுகாதார அமைச்சால் 86 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உபகரணங்களுக்கு பற்றாக்குறை
மேற்படி பல் மருத்துவ பட்டதாரிகளை வரையறுக்கப்பட்ட வழிமுறைபயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் நேற்று (8) கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது அமைச்சர் உறையாற்றுகையில், இந்த நாட்டு மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்த ஒவ்வொரு துறையையும் அறிவியல் ரீதியாகவும் முறையாகவும் நிறுவகிக்க அவசியமான திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு முதல் பல பல் அறுவைசிகிச்சை பட்டதாரிகள் வரையறுக்கப்பட்ட வழிமுறைபயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
பயிற்ச்சியை நிறைவு செய்தவர்களுக்கு உடனடியாக நியமனங்களை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார சேவைக்கான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வித தாமதமும் இன்றி வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட வைத்தியசாலையில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்படுமாயின் அது நிதி பற்றாக்குறையால் ஏற்பட்ட தட்டுபாடு அல்ல மாறாக அவற்றை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டும் செயன்முறை சிக்கல் காரணமாகவே மருந்துகளுக்கும் உபகரங்களுக்கும் பற்றாக்குறை ஏற்படுகிறது என்றார்.