பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் நாமல்
நாட்டில் சீரற்ற கால்நிலை காரணமாக கொட்டித் தீர்த்த கன மழையால் அவதியுற்றிருந்த குருநாகல் மக்களை விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று சந்தித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் குருநாகல் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
The Kurunegala district as well has been adversely affected by the rains that have persisted over the last few days. We need to come together & support the affected families who have not only lost their livelihoods but their homes as well. pic.twitter.com/3lq3S3qzxr
— Namal Rajapaksa (@RajapaksaNamal) November 15, 2021
அங்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் சந்தித்த நாமல் ராஜபக்ச ,
வாழ்வாதாரத்தை மட்டுமின்றி வீடுகளையும் இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாம் ஒன்று கூடி ஆதரவளிக்க வேண்டும் என தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் .


