ஜனாதிபதி ரணிலின் சாதனையை தன் வசமாக்கிய அமைச்சர் ஜீவன்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், (Jeevan Thondaman) இலங்கை வரலாற்றில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம் அமைச்சர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வசமிருந்த சாதனையை ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளார்.
ரணில் 1977 ஆம் ஆண்டு தனது 29 ஆவது வயதில் அமைச்சரவை அமைச்சராக நியமனம் பெற்று, இளம் வயதில் அமைச்சரவை அமைச்சரானவா் என்ற சாதனை தன்வசப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேற்று முன்தினம் (19-01-2023) நியமிக்கப்பட்டார்.
ஜீவன் தொண்டமான் தனது 28 ஆவது வயதில் அமைச்சரவை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து, இலங்கையின் இளம் அமைச்சரவை அமைச்சராகி, ரணிலில் சாதனையை முறியடித்துள்ளார்.