மங்கள சமரவீர குறித்து அமைச்சர் டலஸின் உணர்ச்சிபூர்வ பதிவு!
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் (Mangala Samaraweera) மறைவு மாறுபட்ட அரசியல் கொள்கைகளினால் மனிதாபிமானத்தை மறைக்க முடியாது என்பதை உணர்த்தியுள்ளது என வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை மாவட்ட நபராகவும், ஊடகவியலாளராகவும், தற்போதைய ஊடகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் முன்னாள் அமைச்சர் மறைந்த மங்கள சமரவீர தொடர்பில் என்னுள் மறக்கமுடியாத நினைவுகள் காணப்படுகின்றன.
உயிரை பணயம் வைத்து 1990 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கலவரங்களுக்கு எதிராக பேனாவுடன் போராடிய மாறுப்பட்ட பத்திரிகையாளராகிய எமக்கு அன்று மங்கள சமரவீர சிறந்த தோழரானார். மனித உரிமைக்காக அன்று அவர் வழங்கிய தைரியத்தினால் கொல்லப்பட்ட 60 000 பேருக்கும், குழந்தைகளின் இரத்தத்திற்கும், கண்ணீருக்கும் கௌரவரமளிக்கப்பட்டது.
இவர் மாத்தறைக்கு மங்கள இலட்சினையாக காணப்பட்டார். மங்கள சமரவீர ஏற்றுக் கொள்ள கூடிய கொள்கையினை உடையவர். தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியில் இலாபம் பெறாத வகையில் கொள்கையினை கொண்டிருந்தார்.
மனசாட்சிக்கு அமைய செயற்படுபவர். 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டின் ஊடகத்துறை நவீன பரிணாமத்துடன் வளர்ச்சியடைந்தது.
நவீன மற்றும் தகவல் துறையினை அடிப்படையாக கொண்டு ஊடகத்துறை முன்னேற்றமடைந்தது. மாறுப்பட்ட பல்வேறு அரசியல் கொள்கையினால் மனிதாபிமானத்தை மறைக்க முடியாது என்பதை உணர்த்தி மங்கள சமரவீர எம்மை விட்டு நீங்கியுள்ளார்.