கல்வி அமைச்சர் கடும் அதிருப்தி; முடிவை மாறிய கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தினால், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கடும் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தனவை நீக்கி, வீரவன்சவின் கீழ் உள்ள கைத்தொழில் அமைச்சை அவரிடம் வழங்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்திருந்ததாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதியின் இந்த முடிவிக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த அவர், அமைச்சுப் பதவியை ஏற்காமலேயே தாம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாக அரசாங்கத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்தநிலையில் கல்வி அமைச்சரின் எதிர்ப்பு காரணமாக, கடைசி நேரத்தில் கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க நியமிக்கப்பட்டதுடன்,
தினேஸ் குணவர்தனவின் அமைச்சில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.