கூட்டத்தில் அருச்சுனா எம்பியின் இடுப்பை கிள்ளிய அமைச்சர்; ரணகளத்திலும் கிளுகிளுப்பா!
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அருச்சுனா எம்பியின் இடுப்பை , அமைச்சர் சந்திரசேகர் கிள்ளி கிளுகிளுப்புமூட்டிய காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் , நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா - இராமநாதன்,நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் கடுமையாக மோதிக்கொண்டனர்.

ரணகளத்திலும் கிளுகிளுப்பா....
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்களான, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரின் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைமை பீடத்தில் அமர்ந்திருந்தனர்.
இதன்போது குரங்கு, செம்மறி, குட்டிநாய், விசரன், மடையன், பேய்ப்பயல் போன்ற அநாகரீக வார்த்தை பிரயோகங்களும் பயன் படுத்தப்பட்டது.
இது இவ்வாறு இருக்க கூட்டத்தில் இடையில் அருச்சுனா எம்பியின் இடுப்பை , அமைச்சர் சந்திரசேகர் கிள்ளி கிளுகிளுப்புமூட்டிய காணொளி வெளியான நிலையில், இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பா என சமூக வலைத்தள வாசிகள் கருத்து பதிவிட்டுள்ளனர்.