ஹார்மூஸ் கடலில் கண்ணிவெடி ; உலகை மிரட்டும் டிரம்பிற்கே ஆட்டம் காட்டும் ஈரான்!
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்த நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் கப்பல்கள் செல்லும் கடல் வழியான ஹோர்மூஸ் கடல் வழியை ஈரான் அரசு மூடிவிட்டது.
இதனால் பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து ஈரான் ஹார்மோன்ஸ் நீரிணையை திறக்க வேண்டும் என பல நாட்களாக அமெரிக்கா கோரிக்கை வைத்து வருகிறது.

நீரிணையின் பல இடங்களில் ஈரான் கண்ணி வெடி
ஆனால் அந்த கோரிக்கையை ஈரான் ஏற்கவில்லை.. சமீபத்தில் ஈரான் ஹோர்மூஸ் நீரிணையை திறக்க வேண்டும் என்கிற நிபந்தனையோடு இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
ஆனால் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் திறக்கவில்லை. அதன்பின் பாகிஸ்தானின் முயற்சியில் அந்நாட்டு தலைநகர் இஸ்லாமத்தில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் ஈரான் மற்றும் அமெரிக்கா அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஈரான் அணுசக்தி தயாரிக்க கூடாது என்பது அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையாக இருக்கிறது. ஆனால் ஈரான் அதை ஏற்கவில்லை.
இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.. எனவே மீண்டும் ஈரான் மீதான போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. ஹோர்மூ|ஸ் நீரிணையை ஈரான் திறக்காமல் இருப்பதற்கு வேறொரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது.
போர் தொடங்கியவுடன் ஹோர்மூச் நீரிணையின் பல இடங்களில் ஈரான் கண்ணி வெடிகளை வைத்தது. கடலின் நீரோட்டத்தில் அந்த கண்ணி வெடிகள் காற்றிலும், நீரோட்டத்திலும் நகர்ந்து பல இடங்களுக்கும் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே அதை எல்லாம் கண்டுபிடித்து நீக்குவது சிரமம் என்கிறார்கள்.. இதனால்தான் ஈரான் தனது ஹோர்மூஸ் நீரிணையை திறக்காமல் இருக்கிறது என அமெரிக்காவின் முக்கிய செய்தி நிறுவனமான நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.