பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கொலைமிரட்டல் விடுத்த கோடீஸ்வர வர்த்தகர்
ராஜாங்கனை பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் அதிகாரிகளைப் பரிசோதிக்க சென்ற ராஜாங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கோடீஸ்வர வர்த்தகர் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் மிரட்டியதாக பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கோடீஸ்வர தொழிலதிபர் மேலும் பலருடன் வந்தே இவ்வாறு மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.