தமிழக முதல்வருக்கு இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்த மிலிந்த மொறகொட
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட மற்றும்த் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் சென்னையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ட்விட்டர் தனத்தில் தெரிவித்துள்ளது.
மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் விடயங்களை பரிமாறிக்கொள்ள உரிய பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு இதன்போது இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் தத்துவவியலாளரும் புலவருமான திருவள்ளுவரின் சிலையொன்றை இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை மிலிந்த மொரகொட ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சருக்கு இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட அழைப்பு விடுத்துள்ளார்.