புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை பணம்
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, கடந்த ஓகஸ்ட் மாதத்தில் வௌிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல்கள் மூலம் இலங்கைக்கு 680.8 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் வௌிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் மூலம் 5.116 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கித் தகவல்கள்
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட19.3 சதவீத அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மொத்த சுற்றுலா வருவாய் 2.03 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 1.88 பில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருவாயுடன் ஒப்பிடுகையில் 7.8 சதவீத அதிகரிப்பை காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.