வளகுடா பதற்ற நிலை; எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்த மக்கள்
அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதாக தெரிவிக்கப்டுகிறது.
பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருளுக்காக முண்டியடித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ,பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு ,சம்மாந்துறை ,நிந்தவூர், உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்கின்றது.
இதே வேளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் தற்போது ஏற்பட்டு வருவதாகவும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் சில இடங்களில் இல்லை என்ற வாசகத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

மேலும் பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.