அழகு ராணி பட்டம் வென்ற செவித்திறன் குறைபாடுடைய பெண்
செவித்திறன் குறைபாடுடைய பெண்ணொருவர் முதன் முறையாக தென்னாபிரிக்காவில் அழகு ராணி பட்டத்தை (Mia le Roux) சூடியுள்ளார்.
சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் என்னைப் போலவே வெறித்தனமான கனவுகளை அடைய தனது வெற்றி உதவும் என்று நம்புகிறேன்.
காதில் கோக்லியர் மின்னணு சாதனம்
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ விரும்புகிறேன் என அழகு ராணி பட்டத்தை வென்ற மியா லு ரூக்ஸ் (Mia le Roux)தெரிவித்துள்ளார். 28 வயதுடைய மியா லு ரூக்ஸ்க்கு ஒரு வயதில் ஆழ்ந்த செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
அதன் பின்பு அவரது காதில் கோக்லியர் மின்னணு சாதனம் பொறுத்தப்பட்டது. அத்துடன், முதல் வார்த்தையை பேசுவதற்கு இரண்டு வருடங்கள் பேச்சு திறன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மியா லு ரூக்ஸ் தற்போது அவர் (Mia le Roux) மொடல் மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளராகவுள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்,
"நான் ஒரு தென்னாப்பிரிக்க செவித்திறன் குறைபாடுடைய பெண் என்பதில் பெருமையடைகிறேன், ஒதுக்கப்படுவதால் ஏற்படும் வலி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
நான் எல்லைகளை உடைப்பதற்காக இந்த கிரகத்தில் படைக்கப்பட்டுள்ளேன் என்பதை தற்போது அறிகிறேன். நான் அதை இன்றிரவு செய்துள்ளேன் என அவர் (Mia le Roux) தெரிவித்துள்ளார்.